ஆனால் ஆஸ்திரேலியா, சீனா, நியூசிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விமானத்தை முன்னதாக செய்ற்கைக்கோள் புகைக்பட தகவலின் படி தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தொடர்ந்து விமானம் மற்றும் கப்பல் வாயிலாக தேடி வருகின்றன. அமெரிக்காவின் விமான கருப்பு பெட்டியின் சிக்னல் தண்ணீருக்குள் அடியில் கண்டுபிடிக்கும் கருவியும், தண்ணீருக்கு அடியில் பயணம் செய்யும் கருவியும் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் செயற்கைக்கோள் புகைப்படத்தில் 122 சிதைந்த பொருட்கள் மிதப்பதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பொருட்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் பெர்த் நகருக்கு 2557 கிலோ மீட்டர் தொலைவில் கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் கடந்த 23-ம் தேதி செயற்கைக்கோளால் எடுக்கப்பட்டது என்று மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 1 முதல் 23 மீட்டர் வரையிலான சிதைவு பொருட்கள் மிதப்பதாகவும் பிரகாசமான நிறமுடையதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி