‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ என்பது பாரதியார் பாடலில் உள்ள வரி. அதை ஆபாசமாக திரித்து சொல்வது கண்டிக்கத்தக்கது. மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்க ஒரு கும்பல் இதுபோன்ற வதந்திகளை பரப்புகிறது. இது அதுமாதிரி படம் இல்லை. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து பாராட்டி யு சான்றிதழ் வழங்கி உள்ளனர்.இந்த படத்தை சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் திரையிட மறுத்தனர். தலைப்பு ஆபாசமாக உள்ளது என்று அந்த தியேட்டரின் மானேஜர் கூறினார்.
இந்த படத்தில் பாடல்கள் எழுதி உள்ள கவிஞர் வைரமுத்து மானேஜருக்கு போன் செய்து அது நல்ல படம். உங்க தியேட்டருக்கு இழுக்கு வராது என்று உறுதி அளித்த பிறகு படத்தை திரையிட சம்மதித்தனர்.கமர்ஷியல் ஆன நல்ல பொழுதுபோக்கு படம் என்று விநியோகஸ்தர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் சிலர் திட்டமிட்டு படத்துக்கு எதிராக வதந்தி பரப்புகின்றனர். இதையும் மீறி படம் ஹிட்டாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி