புது இயக்குனர்கள் படமென்றால் எந்நேரமும் ஷூட்டிங்கில் மகள்களின் அருகிலேயே துணைக்கும் அமர்ந்திருப்பார். பாரதிராஜா இயக்கத்தில் அன்னக்கொடி படத்தில் கார்த்திகா, மணிரத்னம் இயக்கத்தில் கடல் படத்தில் துளசி நடித்தபோது மட்டுமே இயக்குனர்களின் பொறுப்பில் மகள்களை விட்டிருந்தார்.பட ஷூட்டிங்கிற்கு மகளின் துணைக்காக சென்றதே இல்லையாம். ஆனால் மீண்டும் கார்த்திகா, துளசி இருவருமே அம்மா கன்ட்ரோலுக்கு வந்துவிட்டனர். அதிலும் இளைய மகள் துளசி அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறாராம்.
கடல் படத்துக்கு பிறகு யான் படத்தில் நடித்து வருகிறார் துளசி. தற்போது ஓரளவுக்கு சினிமா அவருக்கு பழகிவிட்டதாம். முன்பைவிட சுதந்திரமாக நடிக்க தொடங்கி இருக்கிறார்.ஆனால் புதிய படங்களை ஒப்புக்கொள்வதற்கு முன் எந்த இயக்குனராக இருந்தாலும் அம்மா ராதாவிடம் ஓ.கே. வாங்கிய பிறகுதான் ஒப்பந்தத்தில் கையெழுத்துபோடுகிறார் துளசி. இதுபற்றி அவரிடம் கேட்டபோது,எந்த கேரக்டர் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்பது அம்மாவுக்கு தெரியும். அதனால் அவர் எடுக்கும் முடிவை அப்படியே பின்பற்றுகிறேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி