பெல்ஜியம்:-பெல்ஜியம் நாட்டில் De Morgen என்ற புகழ்பெற்ற பத்திரிகை பல வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த பத்திரிகை அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சேல் ஒபாமா ஆகிய இருவரது புகைப்படங்களையும் மனிதக்குரங்கு போன்று போட்டோஷாப்பில் மாற்றி, தங்களது பத்திரிகையில் வெளியிட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த புகைப்படத்தை தங்கள் அலுவலகத்திற்கு அனுப்பி வெளியிட கூறியதாகவும் அந்த பத்திரிகை கூறியுள்ளது.இந்த புகைப்படத்தை பார்த்து பெல்ஜியம் அரசு மட்டுமின்றி உலக நாடுகள் பலவும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
De Morgen பத்திரிகைக்கு கடும் கண்டனங்கள் உலகம் முழுவதிலும் இருந்து வருகிறது. இதனால் பெல்ஜியம் அரசு அந்த பத்திரிகை மீது கிரிமினல் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி