செய்திகள்,திரையுலகம் அமலாபால் கழுத்தில் தாலி கட்டிய ஆர்யாவால் பரபரப்பு!…

அமலாபால் கழுத்தில் தாலி கட்டிய ஆர்யாவால் பரபரப்பு!…

அமலாபால் கழுத்தில் தாலி கட்டிய ஆர்யாவால் பரபரப்பு!… post thumbnail image
சென்னை:-கோவையில் உள்ள பிரபல திருமண மண்டபம் ஒன்றில் நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை அமலாவுக்கும் திடீர் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடத்தி வைத்தார். ஆம். இந்த திருமண காட்சி அவர் இயக்கும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்” என்ற படத்திற்காக படமாக்கப்பட்டது.

நிஜ திருமணம் போலவே மண்டபம் அலங்கரிக்கப்பட்டு, திருமண மேடை பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆர்யா பட்டுவேட்டியும், பட்டு சட்டையும் அணிந்து மணமகன் இடத்திலும் அமலாபால் பச்சைநிற பட்டு சேலை உடுத்தி மணமகள் இடத்திலும் உட்கார்ந்தனர். பின்னர் கெட்டி மேளம் முழங்க அமலாபால் கழுத்தில் தாலி கட்டினார் ஆர்யா. இந்த காட்சியை இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜரத்தினம் மிகச்சிறப்பாக படமாக்கினார். இந்த படத்தின் ஷூட்டிங்கை பார்ப்பதற்கு பொதுமக்கள் குவிந்திருந்ததால் மண்டபத்தின் வெளியே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த படத்தின் கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் பார்த்திபன். அவரே இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்திலும் நடிக்கிறார். இந்த படத்தில் சூர்யா, தனுஷ், ஆர்யா, அமலாபால், நஸ்ரியா போன்ற முன்னணி நடிகர், நடிகைகள் கெளரவ தோற்றத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை கே.சந்திரமோகன் தயாரிக்கின்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி