‘பாண்டியநாடு’ படத்தைப் போலவே ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் வெளியீட்டைப் பற்றி படப்பிடிப்பு துவங்கியபோதே தெரிவித்து ஏப்ரல் 11ல் ரிலீஸ் செய்யப்போகிறார் விஷால்.அதற்கடுத்து, ஏப்ரல் 14ல் ஹரி இயக்கத்தில் விஷால் தயாரித்து நடிக்கப் போகும் படத்தின் படப்பிடிப்பையும் தொடங்கவிருக்கிறார்.
இப்படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். படத்திற்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. அடுத்தடுத்து பல படங்களில் பாடிவரும் ஸ்ருதிஹாசன் குரலுக்கேற்ப ஒரு டியூனை தயார் செய்து வைத்திருக்கிறாராம் யுவன் ஷங்கர் ராஜா.இதில் விஷாலும் ஒரு பாடல் பாடவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‘மத கஜ ராஜா’ படத்தில் மை டியர் லவ்வரு எனும் பாடலை விஷால் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி