சென்னை:-தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மதியம் 1.40 மணிக்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–மு.க.அழகிரி தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.
ஆனால் அவர் தொடர்ந்து கட்சியையும், தி.மு.க. தலைவர்களையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இது குறித்து பொதுச் செயலாளரும் நானும் கலந்து பேசி தி.மு.க.வில் இருந்து மு.க.அழகிரியை நிரந்தரமாக நீக்குவது என முடிவு செய்தோம். அதன்படி அவர் நிரந்தரமாக தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு கருணாநிதி கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி