சென்னை:-சிவகார்த்திகேயன் தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் துரை செந்தில்குமார் இயக்கும் டாணா படத்தில் நடிக்கிறார். அதில் அவருக்கு ஜோடி ஸ்ரீதிவ்யா. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சிவ கார்த்திகேயனுடன் நடித்தவர். படத்தின் இயக்குனர் தனுஷ் என்பதால் ஜோடி ஸ்ரீதிவ்யா என்பதை எந்த மறுப்பும் இல்லாமல் ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் பொன்ராம் இயக்கத்தில் ரஜினி முருகன் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் கதைக்கு தென்னிந்திய சாயல் உள்ள நடிகை தேவையாம்.அதற்கு சமந்தா சரியாக இருப்பார் என்று அவரிடம் கால்ஷீட் கேட்ட முடிவு செய்துள்ளார் பொன்ராம்.
தற்போது விஜய் ஜோடியாக முருகதாஸ் இயக்கும் படத்திலும், சூர்யா ஜோடியாக லிங்குசாமி இயக்க அவரின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் அஞ்சான் படத்திலும் சமந்தா நடித்து வருகிறார்.
என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி