“நாடோடிகள்” படம் வெளியானால் காங்கேயம் சிவன்மலை கோவிக்கு வந்து தரிசனம் செய்வதாக வேண்டிக்கொண்டேன். அந்த வேண்டுதலை நிறைவேற்ற சிவன்மலைக்கு மகன் ஹா விக்னேஷ்வருடன் சென்று சாமி தரிசனம் செய்தேன். “நிமிர்ந்து நில்” படம் லஞ்சத்தை மையமாக வைத்து இயக்குனர் சங்கர் இயக்கிய படம் போல இருப்பதாக சொல்கிறார்கள்.சங்கரை எனக்கு பிடிக்கும். அதனால் சங்கர் படம்போல இருப்பதாக சொல்வதை பெருமையாக நினைக்கிறேன். தேவைபட்டால் என் படத்தில் வன்முறை காட்சிகள் இருக்கும். வன்முறை காட்சி வைக்காமல் வன்முறையின் விளைவுகளை எப்படி சொல்ல முடியும்.
“நிமிர்ந்து நில்” படம் தெலுங்கில் வருகிற ஏப்ரல் 14–ந் தேதி வெளியிடப்படுகிறது. இந்தியிலும் ரீமேக் செய்ய முயற்சி செய்கிறேன். எனக்கு பிடித்த இயக்குனர் கே.பாலசந்தர். நடிகர்களை பொறுத்தவரையில் எல்லோரையும் எனக்கு பிடிக்கும். இவரை வைத்து படம் எடுக்க வேண்டும். அவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று லட்சியம் எதுவும் கிடையாது.யாருடைய கால்சீட்டுக்காகவும் வாய்ப்பு தேடி செல்ல மாட்டேன். புதுசா வர்றவங்களை வைத்து படம் இயக்குவேன். சசிகுமாரை வைத்து 100 படம் எடுப்பேன். என்னை பொறுத்த அளவில் ரசிகர்கள்தான் கடவுள்கள். யாருக்கு ஓட்டப்போட போகிறீர்கள் என்று கேட்கிறீர்கள். எனக்கு அரசியல் தெரியாது.இவ்வாறு சமுத்திரகனி கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி