உலக கோப்பை டி20ல் வெஸ்ட் இண்டீசுடன் மோதியுள்ள 3 ஆட்டங்களில், இந்தியா முதல் முறையாக வென்றுள்ளது. முன்னதாக, 2009 ஜூன் 12ல் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், பிரிட்ஜ்டவுனில் நடந்த போட்டியில் (2010, மே 9) 14 ரன் வித்தியாசத்திலும் இந்தியா தோற்றிருந்தது.மூன்று ஓவரில் 3 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்த புவனேஷ்வர் (3-0-3 -0), டி20ல் சிக்கனமான பந்துவீச்சை சமன் செய்தார்.
அயர்லாந்தின் அலெக்ஸ் குசாக் கென்யாவுக்கு எதிராக (2008, ஆக. 4) 3 ஓவரில் ஒரு மெய்டன் உள்பட 3 ரன்னுக்கு 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார் (3-1-3- 2).தவான் டி20ல் தனது முதல் டக் அவுட்டை பதிவு செய்தார்.டி20ல் அமித் மிஷ்ரா தொடர்ச்சியாக 2வது ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி