கராச்சி:-பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்டட் கராச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றது. மோசமான பேட்டிங் தான் இந்த தோல்விக்கு காரணம்.
இதனால் பாகிஸ்தான் அணி வாய்ப்பு முடிந்து விடவில்லை. பாகிஸ்தானும், இந்தியாவும் இறுதிப்போட்டியில் மோதும் என்ற நம்பிக்கை இருக்கிறது.பாகிஸ்தான் அணி எஞ்சிய 3 ஆட்டத்திலும் வென்று அந்த பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும். பாகிஸ்தான், இந்தியா, வெஸ்ட்இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரை இறுதியில் நுழையும்.
இதில் இந்தியா– பாகிஸ்தான் இறுதிப்போட்டியில் மோத வாய்ப்பு உள்ளது. எங்களது பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் சுழற்பந்தை கையாள முடியாததால் தோல்வியை சந்தித்தனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி