செய்திகள்,திரையுலகம் விஜய்யின் படத்தில் வில்லனாக நடிக்கும் 7 வயது சிறுவன்!…

விஜய்யின் படத்தில் வில்லனாக நடிக்கும் 7 வயது சிறுவன்!…

விஜய்யின் படத்தில் வில்லனாக நடிக்கும் 7 வயது சிறுவன்!… post thumbnail image
சென்னை:-கிரீடம் படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய் தாண்டவம், தலைவா படத்திற்கு பிறகு சைவம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்தில் தெய்வதிருமகள் படத்தில் நடித்த குழந்தை சாரா, நாசர் மற்றும் நாசர் மகன் பாஷா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர்

திங்க் பிக் ஸ்டூடியோஸ் என்ற ஏ எல் விஜய்யின் முதல் தயாரிப்பில் வெளிவர இருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தை பற்றி பேட்டி அளித்த ஏ.எல்.விஜய் படத்தை பற்றி பல விஷயம் சொன்னாலும் ஒரு சுவாரசியமான விஷயம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.சைவம் படத்தில் குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்று இருக்கு,இப்படத்தில் வரும் வில்லனுக்கு 7 வயதாம்.

ஆனால் அவர் நடித்த காட்சி காட்சிகள் தான் இயக்குனர் விஜய்யை மிகவும் ஈர்த்துள்ளதாம்.
7 வயதில் நாம் எப்படி இருந்திருப்போம், ஆனால் இச்சிறுவன் இந்த வயதில் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். நான் மட்டுமல்லாமல் இப்படம் வெளிவந்த பின் நீங்களும் இச்சிறுவனை பற்றி பேசுவீர்கள் என தெரிவித்திருக்கிறார் ஏ.எல்.விஜய்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி