சென்னை:-விரைவில் வரவிருக்கும் படம் சைவம் இந்த படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார்.இந்த படத்தில் நாசர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இந்த படத்தில் நாசருக்கு வழுக்கை தோற்றம் உள்ள வேடம் என்பதால் தனது தலைமுடியை மொட்டை போட்டுக் கொண்டார்.இந்த படம் நாசரின் நடிப்பைக்கு மேலும் வலுசேர்க்கும் என்று இயக்குநர் தெரிவித்தார்.நாசர் மொட்டை அடித்தது குறித்து இயக்குநர் கூறியதாவது;
நடிகர் நாசருக்கு இந்த படத்தில் வழுக்கை தலையுடைய கூடிய கதாபாத்திரம் அவருக்கு இயற்கையாகவே பொருந்தியுள்ளது. இந்த படத்தின் கதாபாத்திரத்தை பற்றி நான் அவரிடம் கூறினேன்.நாசர் மொட்டை அடித்துக் கொள்ள ஒப்புக் கொண்டார் இருந்தாலும் தனது மனைவியிடம் கேட்டு விட்டு மொட்டை அடிப்பதாக கூறினார்.
அவரின் மனைவியிடம் கதாபாத்திரம் பற்றி நாசர் எடுத்து கூறினார் நாசரின் மனைவியும் மொட்டை அடிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.நாசர் சினிமா துறையில் மிகவும் கடுமையான உழைப்பாளி.இந்த படத்தில் நாசருக்கு உண்மையிலேயே அவரது காதாபாத்திரம் பொருந்தி இருக்கிறது என்று இயக்குநர் ஏ.எல்.விஜய் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி