அப்போது அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களில் ஒரு மூத்த பத்திரிகையாளர் தேசிய கொடியை ஆம் ஆத்மி தொண்டர்கள் அவமதித்ததாக கூறியதாகவும் இதையடுத்து ஆம் ஆத்மி தொண்டர்கள் சிலர் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.இதற்கிடையே, இந்த பிரச்சனை குறித்து மூத்த ஆம் ஆத்மி தலைவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை ஒரு மூடப்பட்ட அத்தியாயமாக ஊடகத்துறையினர் கருத வேண்டும் என்றும் இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.சமீபத்தில், கெஜ்ரிவால் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் ஊடகத்துறையினரை சிறைக்கு அனுப்பவும் தயங்க மாட்டேன் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி