அரசியல்,செய்திகள்,திரையுலகம் சூப்பர் ஸ்டார் மீது அமர்சிங் குற்றச்சாட்டு!…

சூப்பர் ஸ்டார் மீது அமர்சிங் குற்றச்சாட்டு!…

சூப்பர் ஸ்டார் மீது அமர்சிங் குற்றச்சாட்டு!… post thumbnail image
புதுடெல்லி:-சமாஜ்வாடி கட்சி முன்னாள் பொதுச்செயலாளர் அமர்சிங்கும், நடிகர் அமிதாப்பச்சனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். தற்போது இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.அமர்சிங் சமாஜ்வாடியில் இருந்து விலகி அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக்தளம் கட்சியில் இணைந்து உத்தரப்பிரதேச மாநிலம் பதேப்பூர் சிக்ரி தொகுதியில் போட்டியிடுகிறார். அமர்சிங்குக்கு ஆதரவாக முன்பு பிரசாரம் செய்த அமிதாப்பச்சனின் மனைவி ஜெயாபச்சன் தொடர்ந்து சமாஜ்வாடி கட்சியில் இருந்து வருகிறார்.

அமிதாப்பச்சன் குஜராத் மாநில சுற்றுலா தூதராக இருக்கிறார். அவர் நரேந்திர மோடியை ஆதரித்து டி.வி.க்களில் பிரசாரம் செய்கிறார்.இதையடுத்து அமிதாப்பச்சன் மீது அமர்சிங் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றி அமர்சிங் கூறியதாவது:–அமிதாப்பச்சன், மோடியை ஆதரிக்கிறார். அவரது மனைவி ஜெயாபச்சனோ சமாஜ்வாடி கட்சியில் எம்.பி.யாக இருந்து வருகிறார். நீங்களே கற்பனை செய்து பாருங்கள், கணவர் மோடி பக்கமும், மனைவி முலாயம் பக்கமும் இருக்கிறார்கள். நாட்டின் நட்சத்திர குடும்பத்தில் இந்த முரண்பாடு ஏன் என்று தெரியவில்லை.

தேர்தலுக்குப்பின் முலாயம்சிங்கும், மோடிக்கும் இடையே பாலமாக இருந்து செயல்பட திட்டமிட்டு இருக்கிறார்கள்கள். இவர்கள் மூலம் எதிர்காலத்தில் முலாயம்சிங் யாதவ் நரேந்திர மோடியுடன் கூட்டணி சேர திட்டமிட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி