இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சமீபத்தில் லேகா என்ற பெண்ணை சந்தித்தேன். அவருடைய ஒரு சிறுநீரகத்தை பெரும் பணக்காரர் ஒருவருக்கு பொருத்த 15 லட்சம் ரூபாய் தர முன்வந்துள்ளனர். ஆனால் அந்தப் பெண் சிறுநீரகத்தை தானம் செய்யலாம் என்பதை புரிந்து கொண்டு தன் சிறுநீரகத்தை விலைபேசியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதை ஒரு ஏழைக்கு இலவசமாக தானம் கொடுத்திருக்கிறார். அவரது சேவையை பாராட்டி நாங்கள் ஒரு லட்சம் கொடுத்தோம். அதையும் அவர் பெற்றுக்கொள்ள மறுத்தார். வற்புறுத்தி கொடுத்துவிட்டு வந்தோம்.
லேகாவின் செயல் என் கண்களை திறந்தது. அவருக்கு முன்னால் நாமெல்லாம் ஒன்றுமே இல்லை என்று தோன்றிது. அந்த உள்ளுணர்வில் சொல்கிறேன். நானும் எனது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்திருக்கிறேன்.திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்துக் கொள்ளவில்லை. சில காலம் ஆஷிக்கிற்கு நல்ல மனைவியாக இருக்க முடிவு செய்திருக்கிறேன். அதன் பிறகு நடிப்பேன் என்கிறார் ரீமா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி