அந்த அளவுக்கு பனிப்பொழிவு இருப்பதால் இவ்வாறு இங்கிலாந்து வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். இந்த பனிப்பொழிவு ஐசிசிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆடுகளத்தில் படர்ந்துள்ள பனியை எவ்வாறு விலக்க முடியும் என்று யோசித்து வருகிறார்கள். இதனை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவியை ஐசிசி கேட்டிருக்கிறது. டெல்லி கிரிக்கெட் சங்கம் ஐபிஎல் போட்டிகளில் பிரத்யேக கெமிக்கலை ஆடுகளத்தில் தெளித்து பனியை கட்டுப்படுத்தின. இது நல்ல பலன் கொடுத்தது. எனவே அந்த கெமிக்கலை வாங்கி வங்கதேசத்தில் நடைபெறும் போட்டியில் பயன்படுத்தலாம் என்று ஐசிசி திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐசிசி ஆடுகள வடிவமைப்பாளர் அட்கின்சன், டெல்லி கிரிக்கெட் சங்க ஆடுகள வடிவமைப்பாளர் வெங்கட் சுந்தரத்திடம் பேசியுள்ளார். மேலும் டெல்லி கிரிக்கெட் சங்கமும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை ஆடுகள வடிவமைப்பாளர் டால்ஜித் சிங்கிடம் இந்த குறிப்பிட்ட கெமிக்கல் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டது. இதையடுத்து 60 லிட்டர் கெமிக்கலுடன் ஒரு அதிகாரி வங்கதேசத்திற்கு விரைந்திருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி