இந்நிலையில் சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்கு நடிகருமான பவண்கல்யாண் சமீபத்தில் தனிக்கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். அவருடைய கட்சியின் பெயர் ஜனசேனா என்பதாகும். வரும் பாராளுமன்ற தேர்தலில் தனியாக தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் செகந்திராபாத் கூட்டம் ஒன்றில் பேசிய பவண்கல்யாண், ‘ஒற்றுமையாக இருந்த ஆந்திர மக்களை ஒரு சிலரின் சுயநலத்திற்காக பிரித்த காங்கிரஸ் கட்சியை ஒழிக்காமல் ஓய மாட்டேன் என சபதம் செய்தார்.
இவருடைய பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தெலுங்கு நடிகை ஜெயசுதா, ‘ஆந்திராவில் யார்தான் கட்சி ஆரம்பிப்பது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. அப்படியே கட்சி ஆரம்பித்தாலும் இறுதி வரை காப்பாற்றாமல் சிறிது நாட்களிலே ஓடிப்போவர்கள்தான் அதிகம். காங்கிரஸுக்கு எதிராக கட்சி ஆரம்பித்து பின்னர் மீண்டும் காங்கிரஸ் காலடியிலேயே விழுந்து கொண்டு வருபவர்களை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்று கூறியுள்ளார். இவர் ரஜினிகாந்த் நடித்த ‘பாண்டியன்’ என்ற படத்தில் ரஜினியின் சகோதரியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி