உலகில் உள்ள 239 முக்கிய நகரங்களின் தரவரிசை பட்டியலை இந்த ஆண்டு வெளியிட்டுள்ள அந்நிறுவனம், அனைத்து வகைகளிலும் உலகின் மிகவும் மோசமான நகரம் என்று ஈராக் தலைநகரான பாக்தாத்தை குறிப்பிட்டுள்ளது.இங்கு வாழும் மக்கள் அன்றாடம் உயிர் பயத்துடன் தீவிரவாத தாக்குதல்களை சந்தித்துக் கொண்டு,போதுமான குடிநீர், மின்சாரம், கழிவுநீர் வெளியேற்றும் வசதி போன்ற அடிப்படை தேவைகள் கூட கிடைக்காத நிலையில், உரிய வேலைவாய்ப்பின்றி ஊழல் நிறைந்த அடக்குமுறை ஆட்சியின் கீழ் வாழ்ந்து வருவதாக இந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.கி.பி.762-ம் ஆண்டு டைகிரிஸ் ஆற்றின் மீது உருவாக்கப்பட்ட பாக்தாத் நகரம், வரலாற்று சிறப்பு மிக்க தொன்மையான நகரங்களில் ஒன்றாக ஒரு காலத்தில் தலை நிமிர்ந்து நின்றது.
தலை சிறந்த பல்கலைக்கழகங்கள், வரலாற்று பதிவுகளை பொக்கிஷமாக போற்றி பாதுகாக்கும் கலையழகு மிக்க அருங்காட்சியகங்கள், நவீன விமான நிலையம், என அரபு நாடுகளின் கம்பீர அடையாளமாக திகழ்ந்த இந்நகரம் இன மோதல்களாலும், அதனைத் தொடர்ந்த உள்நாட்டுப் போர் மற்றும் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படையினருடனான போர் ஆகியவற்றிலும் சிக்கி, உருக்குலைந்து, சின்னாபின்னமாகி தற்போது பேய் வீடு போல் காட்சியளிப்பதாக உள்ளூர்வாசிகள் கவலையுடன் கருத்து தெரிவிக்கின்றனர்.இங்குள்ள மக்கள் பெரும்பாலும் இரவு வேளைகளில் வெளியே செல்ல பயந்தபடி, ஒவ்வொரு நிமிடத்தையும் மரண பயத்துடன் கடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி