புதுடெல்லி:-பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர், சரித்திர நாவல் ஆசிரியரான குஷ்வந்த் சிங் புதுடெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 99. இவர் பஞ்சாப் மாநிலம் ஹடாலி என்ற இடத்தில் 1915–ல் பிறந்தார். தற்போது இந்த ஊர் பாகிஸ்தானில் உள்ளது.
பல்வேறு பத்திரிகையில் ஆசிரியாராக பணிபுரிந்து உள்ளார். தனது முற்போக்கான எழுத்துக்கள் மூலம் வறுமை, மதசார்பின்மை, அரசியலில் தூய்மை போன்றவற்றில் துணிச்சலுடன் கருத்துகள் சொல்லி விழுப்புணர்வு ஏற்படுத்தினார். அவருக்கு மத்திய அரசு பத்ம விபூஷண் வருது வழங்கி கவுரவித்தது.
முதுமை காரணமாக எழுத்து பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவர் உடல் நல குறைவால் இன்று பகல் 12.55 மணிக்கு டெல்லியில் மரணம் அடைந்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி