நேற்று மாடியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக லிப்டிற்காக காத்து நின்று கொண்டிருந்தார். அப்போது, டிப்–டாப் உடை அணிந்த வாலிபர் ஒருவர் அருகில் நின்று கொண்டிருந்தார்.திடீரென அந்த வாலிபர் நடிகை ரியா சக்கரபோர்த்தியின் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரியா சக்கரபோர்த்தி அந்த நபரை காலால் எட்டி உதைத்தார். உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து நடிகை ரியா சக்கரபோர்த்தி நேற்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.இந்த சம்பவம் குறித்து நடிகை ரியா சக்கரபோர்த்தி டுவிட்டர் இணையதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் ‘‘நான் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் கட்டிடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. என்னை மானபங்கம் செய்த நபரை உடனடியாக போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி