சென்னை:-ரஜினிகாந்த், தீபிகா படுகோன், ஷோபனா, நாசர், சரத்குமார், ஆதி போன்ற நட்சத்திரங்கள் நடித்த படம் ‘கோச்சடையான்‘. இப்படத்தின் மூலம் ரஜினியின் மகள் செளந்தர்யா இயக்குநராக அறிமுகமாகிறார் .
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் . முழுப்படமும் நடிப்புப் பதிவாக்கத் தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளது.இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
பட வெளியீட்டுக்காக அனைவரும் காத்திருக்கும் நிலையில், படம் தணிக்கைத் துறையின் சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது.படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளது. குடும்பத்துடன் பார்க்கும் வகையில் படம் அமைந்திருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி