சென்னை:-‘அஞ்சான்’ படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக சமந்தா நடிக்கிறார். லிங்குசாமி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடக்கிறது.
இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் தகவலை லிங்குசாமி வெளியிட்டார். அவர் கூறியதாவது:–சூர்யாவுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் நடிப்புக்கென்றே தன்னை அர்ப்பணித்து உள்ளார். அஞ்சான் படத்தில் மும்பை தாதாக்கள் கூட்டத்து இளைஞனாக நடிக்கிறார். அவர் தோற்றம் ரொம்ப ஸ்டைலாக இருக்கும். இரு வேடங்களில் வருகிறார்.
இரண்டு கேரக்டர்களுமே ஸ்டைலாக செதுக்கப்பட்டு உள்ளது. அஞ்சான் முழு கமர்சியல் படமாக இருக்கும். சஸ்பென்ஸ், ஆக்ஷன், காதல் என நல்லா விஷயங்களும் படத்தில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி