அரசியல்,செய்திகள் 157 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் மோடியை எதிர்த்து போட்டி!…

157 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் மோடியை எதிர்த்து போட்டி!…

157 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் மோடியை எதிர்த்து போட்டி!… post thumbnail image
கேரளா:-கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் பத்மராஜன். இவர் கடந்த 25 ஆண்டுகளில் 157 தேர்தலில் போட்டியிட்டுள்ளார். பெரும்பாலும் வி.ஐ.பி. தொகுதிகளில் போட்டியிட்டு டெபாசிட் இழப்பார். ஜனாதிபதிகள் பிரணாப் முகர்ஜி, கே.ஆர்.நாராயணன், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை எதிர்த்தும் போட்டியிட்டுள்ளார்.

இவர்களை தவிர 11 முதல்வர்கள், 13 மத்திய அமைச்சர்கள், 14 மாநில அமைச்சர்கள் உட்பட பலரை எதிர்த்து போட்டிட்டு, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இதுவரை 157 தேர்தல்களில் போட்டியிட்டு டெபாசிட் இழந்துள்ளார். இதனால் அவருக்கு ரூ.12 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுகிறார். தற்போது வாரணாசி தொகுதியில், மோடியை எதிர்த்து போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் மனுத்தாக்கலுக்கு முன் இவர் சபரிமலை சென்று தரிசனம் செய்வது வழக்கமாம். இதுகுறித்து பத்மராஜன் கூறுகையில், தேர்தலில் யாரையும் எதிர்த்து போட்டியிட அனைத்து குடிமகன்களுக்கும் உரிமை உள்ளது என்பதை மக்களுக்கு தெரிவிக்கவே நான் இவ்வாறு போட்டியிடுகிறேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி