செய்திகள்,திரையுலகம் மீண்டும் விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்ந்தார் நந்திதா!…

மீண்டும் விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்ந்தார் நந்திதா!…

மீண்டும் விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்ந்தார் நந்திதா!… post thumbnail image
சென்னை:-விஜய்சேதுபதி மற்றும் விஷ்ணு நடிப்பில் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் சீனு ராமசாமி. இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் வைரமுத்து, யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி முதன் முறையாக இணைகிறது. படத்தின் நாயகியாக முதலில் மனிஷா யாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு நீக்கப்பட்டார்.மலை ஜாதி பெண் கதாப்பாத்திரத்திற்கு மனிஷா பொருத்தமாக இல்லை என அவர் நடித்த காட்சிகளை பார்த்த இயக்குநருக்குத் தோன்றியதே காரணம் எனக்கூறப்படுகிறது.

தற்போது மனிஷா யாதவ்விற்கு பதில் நந்திதா நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் விஜய்சேதுபதி – நந்திதா ஜோடி சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி