சென்னை:-பென்சில் படத்தில் நாயகனாக நடித்துவரும் ஜி.வி.பிரகாஷ் மேலும் ஒரு படத்தில் நயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் பெயர் “த்ரிஷா இலியானா நயன்தாரா”. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆதிக் என்பவர் இயக்கவிருக்கிறார்.
இந்த படத்தில் முக்கிய விசயம் என்னவென்றால் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், ஸ்ரீதேவியும், ஜோடியாக நடிக்கின்றனர். இவர்களின் மகனாகத்தான் ஜி.வி.பிரகாஷ் நடிக்கின்றார். கருத்துவேறுபாடு காரணமாக பிரிய நினைக்கும் தாய், தந்தையரை தன்னுடைய புத்திசாலித்தனத்தாலும், பாசத்தாலும் ஒன்றுசேர்த்து வைக்கும் மகன் கேரக்டரில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இந்த படத்தை ரிபெல் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரிக்கின்றது.
இந்த படத்தின் டைட்டிலுக்காக த்ரிஷா, இலியானா, நயன்தாரா ஆகிய மூன்று நடிகைகளிடமும் முறைப்படி அனுமதி பெற்றுவிட்டாராம் இயக்குனர் ஆதிக் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி