சென்னை:-லட்சக்கணக்கான உலகத்தமிழர்களை தனது இசையால் கட்டுப்படுத்திய இசைஞானி இளையராஜாவுக்கு இதுவரை அதிகாரபூர்வமான ரசிகர் மன்றம் இல்லை. பொதுவாக நடிகர் மற்றும் நடிகைகளுக்கு மட்டுமே ரசிகர் மன்றம் அமைப்பது உண்டு.
மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ரசிகர் மன்றம் பெரும்பாலும் உருவாக்குவது இல்லை. ஆனால் இளையராஜாவின் பரம ரசிகரும், திரைப்படத்தயாரிப்பாளருமான வேலுச்சாமி என்பவரின் தீவிர முயற்சியால் முதல் ரசிகர் மன்றம் வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி தொடங்க இருக்கின்றது.
இதன் தொடக்கவிழா வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி மதுரையில் நடக்கவிருப்பதாகவும், இந்த விழாவிற்கு இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக்ராஜா கலந்துகொண்டு விழாவை சிறப்பித்து தருவார் என்றும் கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி