ஐதராபாத்:-பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–காங்கிரஸ் ஆட்சியில் நாடு ஊழல் மயமாகி விட்டது. தொழில் அதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயங்குகிறார்கள். அவர்கள் வெளி நாடுகளில் முதலீடு செய்ய தொடங்கி விட்டார்கள்.
நரேந்திர மோடியால் குஜராத் மாநிலம் எல்லா வகையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதுபோல் நாடு முன்னேற மோடி பிரதமராக வேண்டும்.நமது நாட்டு மக்களை காப்பாற்ற ‘‘ஏசு அனுப்பி வைத்த ரட்சகர் மோடி’’. அவரை நோக்கி இந்த நாடு காத்து நிற்கிறது.
கட்சி சம்பந்தமில்லாத அனைவரும் மோடி பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார்கள். மோடி கோஷத்தை நடிகர் பவன் கல்யாண் கூட உச்சரிக்க தொடங்கி விட்டார்.
வாரணாசியில் போட்டியிடுவது மோடியின் விருப்பம் அல்ல. கட்சி தான் அவரை அங்கு நிறுத்தியுள்ளது.இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி