முருகதாஸ் தற்போது விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிலும், ‘துப்பாக்கி’யின் இந்தி ரீமேக்கான ‘ஹாலிடே’ படத்தை ரிலீஸ் செய்வதிலும் மும்மரமாக இருக்கிறார்.இதே நேரத்தில் முருகதாஸ் தெலுங்குப் படம் இயக்கப்போவதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது அடுத்தபடம் அஜித்துடன் தான் என தெளிவாகக் கூறிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்.
படத்தின் பெயர் ‘தல‘ எனக் கூறப்படுகிறது. அஜித்திற்கு ‘தீனா’ படத்தில் தல என்ற பட்டப்பெயர் வைத்தது ஏ.ஆர்.முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஜித் அதனை முடித்துவிட்டு ‘தல’ படத்தில் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி