செய்திகள்,திரையுலகம் டிரம்ஸ் சிவமணி இசையமைக்கும் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்!…

டிரம்ஸ் சிவமணி இசையமைக்கும் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்!…

டிரம்ஸ் சிவமணி இசையமைக்கும் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்!… post thumbnail image
சென்னை:-ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவில் நீண்டகாலம் பணியாற்றி வந்த டிரம்ஸ் சிவமணி, முதன்முதலாக ஒரு படத்திற்கு இசையமைத்துளார். அந்த படத்தின் பெயர் அரிமா நம்பி. இந்த படத்தில் விக்ரம் பிரபு, ப்ரியாஆனந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

புதுமுக இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கியிருக்கும் இவர், ஏ.ஆ.ரஹ்மானிடம் உதவி இயக்குனராக இருந்தவர். கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகர் அமைத்துள்ளார்.டிரம்ஸ் சிவமணி அரிமா நம்பி படத்திற்காக ஐந்து அற்புதமான பாடல்களுக்கு டியூன் போட்டுள்ளார். அத்தனையும் லட்டு மாதிரி தித்திக்கும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு வர, ஏ.ஆர்.ரஹ்மான ஒப்புதல் கொடுத்துள்ளாராம். சிவமணி மீது ரஹ்மானுக்கு எப்போதுமே ஒரு மதிப்பு கலந்த பாசத்தை பொழிவார் ரஹ்மான். அதனால் இசைவெளியிட்டிற்கு வருவதற்கு சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா ஏப்ரல் மாதல் 13ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி