செய்திகள்,திரையுலகம் ‘உத்தம வில்லன்’ படத்தில் டபுள் ரோலில் நடிக்கும் கமல்!…

‘உத்தம வில்லன்’ படத்தில் டபுள் ரோலில் நடிக்கும் கமல்!…

‘உத்தம வில்லன்’ படத்தில் டபுள் ரோலில் நடிக்கும் கமல்!… post thumbnail image
சென்னை:-‘உத்தம வில்லன்‘ படத்தில் கமல் டபுள் ரோலில் நடிக்கிறார். உத்தமன் என்ற எட்டாம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் கேரக்டரிலும், மனோரஞ்சன் என்ற 21ம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரம் கேரக்டரிலும் நடிக்கிறார்.

மனோரஞ்சனின் குருவாக இயக்குநர் கே.பாலசந்தர் நடிக்கிறார்.மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசி நடிக்கிறார்.எட்டாம் நூற்றாண்டில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமார் நடிக்கிறார். 21ம் நூற்றாண்டில் சினிமா ஸ்டார் கமலின் காதலியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.

சர்வாதிகாரி கேரக்டரில் நாசரும், ஜேகப் ஜக்காரியா கேரக்டரில் ஜெயராமும், ஜேயராம் வளர்ப்பு மகளாக பார்வதி மேனனும் நடிக்கிறார்கள்.எம்.எஸ்.பாஸ்கர் சொக்கு செட்டியார் என்ற முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி