சென்னை:-ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஷோபனா ஆகியோர் நடித்த கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடந்தது. பாடல்கள் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அன்றே வெளியான கோச்சடையான் டிரைலர் இரண்டே நாட்களில் 1.1 மில்லியன் ரசிகர்கள் உலகெங்கும் பார்த்து ரசித்துள்ளனர்.
இந்நிலையில் கோச்சடையான் படத்தில் ஆதியின் கேரக்டரில் நடிக்க முதலில் தனுஷை அணுகியதாகவும், ஆனால் தனுஷ் அப்போது ராஞ்சன்னா என்ற படத்தில் பிசியாக நடித்துக்கொண்டிருந்ததால் அவரால் இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை என்றும் படத்தின் இயக்குனர் செளந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
மேலும் தனது சகோதரி ஐஸ்வர்யா, தனக்கு இந்த படம் குறித்து பல ஆலோசனைகள் கூறியதாகவும், அவருடைய ஆலோசனைகள் அனைத்துமே தனக்கு மிகவும் உதவியாக இருந்தது என்றும் கூறினார்.மேலும் படத்தின் டிரைலர் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது என்றும் செளந்தர்யா கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி