செய்திகள்,திரையுலகம் விஜய்க்கு சவால் விடும் சீமான்!…

விஜய்க்கு சவால் விடும் சீமான்!…

விஜய்க்கு சவால் விடும் சீமான்!… post thumbnail image
சென்னை:-அரசியல் மற்றும் பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றில் பிசியாக இருந்தாலும் விஜய் கால்ஷீட் கொடுக்க சம்மதித்ததால் இயக்குனர் சீமான் பகலவன் என்ற படத்தை இயக்க சில வருடங்களுக்கு முடிவு செய்தார். இந்நிலையில் விஜய் திடீரென அந்த படத்தில் இருந்து விலகியதால் பகலவன் படத்தை எடுக்கும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில் சூர்யாவை வைத்து லிங்குசாமி எடுக்கும் படத்தின் கதை, தனது பகலவன் கதையை ஒட்டி இருப்பதாக சீமான் திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த லிங்குசாமி, பகலவனின் கதை என்னவென்றே தனக்கு தெரியாது என்றும், அஞ்சான் தன்னுடைய சொந்த கதை என்றும் பதில் கூறிவருகிறார்.

இந்நிலையில் பகலவன் படத்தை மீண்டும் துவங்க சீமான் முடிவு செய்துள்ளார். விஜய்க்கு பதிலாக அருண் விஜய்யை இந்த படத்தில் நடிக்க வைக்க அவர் முடிவு செய்துள்ளார். அருண் விஜய்க்கு இந்த படம் வெளியானால் கண்டிப்பாக அவரது நடிப்பு பேசப்படும் என்றும், விஜய்க்கு சவால் விடும் அளவுக்கு பகலவன் மாபெரும் வெற்றி பெறும் என்றும் சீமான் கூறியுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த ஆலோசனைகள் நடந்து வருகின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி