செய்திகள் மனநிலை பாதித்த பெண்னை ஏடிஎம்.மில் பலாத்காரம் செய்த வாலிபர்!…

மனநிலை பாதித்த பெண்னை ஏடிஎம்.மில் பலாத்காரம் செய்த வாலிபர்!…

மனநிலை பாதித்த பெண்னை ஏடிஎம்.மில் பலாத்காரம் செய்த வாலிபர்!… post thumbnail image
ஹவுரா:-மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ளது அந்துல் பகுதி. இங்குள்ள சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் ஒருவர் இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். நசிர் கன்ஞ்சில் உள்ள பான்ட்ரா என்ற பகுதியில் ஒரு பெண் தனியாக நின்று கொண்டிருப்பதை பார்த்ததும் அவருக்கு சபலம் ஏற்பட்டது.

அந்த பெண்ணை, பாதுகாப்புக்கு ஆள் இல்லாமல் இருந்த ஏ.டி.எம். மையத்துக்குள் இழுத்து சென்று பலாத்காரம் செய்தார். இந்த காட்சிகள் அனைத்தும் ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. அப்போது ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வியாபாரி சென்ற போது, அந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வாலிபரை பிடிக்க முயன்ற போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அவர்கள் அனைவரும் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து விசாரித்தனர்.

அவர் பெயர் ராஜேஷ் (37) என்றும், திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ஹவுரா போலீசில் ராஜேஷை ஒப்படைத்தனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வந்தது. அவரை மருத்துவ பரிசோதனைக்காக ஹவுரா மாவட்ட மருத்துவமனையில் போலீசார் சேர்த்துள்ளனர். ஏடிஎம் மைய கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக கொண்டு, ராஜேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி