செய்திகள்,திரையுலகம் மணிரத்னத்தின் அடுத்த படம் தளபதி 2 ?…

மணிரத்னத்தின் அடுத்த படம் தளபதி 2 ?…

மணிரத்னத்தின் அடுத்த படம் தளபதி 2 ?… post thumbnail image
சென்னை:-கடல் படம் படுதோல்வி அடைந்ததால் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் மணிரத்னம். எனவே இம்முறை தெலுங்கு நடிகர்களின் துணையோடு களத்தில் இறங்குகிறார். நாகார்ஜுனனை வைத்து மணிரத்னம் இயக்கிய ‘கீதாஞ்சலி’ தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் ஆகியதால் அதே ஹீரோவை வைத்து அடுத்த படத்தை எடுக்க முடிவு செய்துவிட்டார்.

படத்தின் மெயின் ஹீரோ மகேஷ்பாபு மற்றும் அவருக்கு ஜோடி ஐஸ்வர்யாராய் என்று மணிரத்னத்தின் நட்சத்திர பட்டாளம் நீண்டுகொண்டே போகிறது. மேலும் இந்த படம் ரஜினிகாந்த் நடித்து மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தின் தொடர்ச்சி என்று அவரது வட்டாரங்களில் இருந்த தகவல்கள் கசிந்துள்ளது.தளபதி படத்தில் மம்முட்டி கிளைமாக்ஸில் இறந்துவிடுவார். எனவே மம்முட்டியின் மகனாக மகேஷ்பாபுவும், ரஜினி நடித்த வேடத்தில் நாகார்ஜுனனும் நடிப்பதாக மணிரத்னத்தின் உதவி இயக்குனர்கள் செய்தியை கோலிவுட்டில் கசியவிட்டுள்ளனர்.

இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாமல் கோலிவுட் குழம்பிக்கொண்டு இருக்கிறது. ஆனால் மணிரத்னம் இந்த படம் முற்றிலும் வித்தியாசமானது என்றும் தளபதிக்கு இதற்கும் எவ்வித தொடர்பு இல்லை என்றும், இது முழுக்க முழுக்க ஒரு காதல் கதை என்றும் கூறிவருகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி