படத்தின் இயக்குநரோ இன்னும் ஒரு படிமேல் போய், “படத்தின் கதையில் சரண்யா மேடம் சொன்ன சின்ன சின்ன கரெக்சன்களைகூட நான் ஏத்துக்கிட்டேன்.. ஏன்னா அவங்க நிஜமாவே ஒரு டீன் ஏஜ் பொணணுக்கு அம்மா.. அப்போ அவங்களோட அந்த பீலிங் உண்மையைத்தானே இருக்கும். அதுனால அவங்க இந்தப் படத்துல உண்மையா, ரொம்ப இன்வால்வ்மெண்ட்டோட நடிச்சுக் கொடுத்தாங்க..” என்றார்.ஒவ்வொரு நாள் படத்தின் ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பியவுடன் தனது மகளிடம், இன்னிக்கு என்னென்ன டயலாக் பேசினேன் என்பதை ஒப்பிப்பாராம் சரண்யா. அதையேதான் உனக்கும் சொல்றேன்னு மகளிடமும் சொல்வாராம்.. நல்ல ஒத்துமைதான்.இந்தப் படத்தில் ஹீரோயின் இஷாராவுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் சரண்யா. கதைப்படி ஹீரோவுக்கு மாமியார்.. “எப்பவுமே சினிமாக்கள் மாமியார்களை நெகட்டிவ்வாவே காட்டுவாங்க.. ஆனா இதுல அப்படியே மாத்தி நல்ல மாமியாரா காட்டியிருக்காங்க. ஹீரோ செந்திலுக்கு இன்னொரு அம்மா மாதிரி நடிச்சிருக்கேன்..” என்றார் சரண்யா.
இந்தப் படத்தில் செந்தில், இஷாரா, சரண்யா, நரேன், இளவரசு, ஜெகன், சிங்கம்புலி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இசை விஜய் எபிநேசர். எழுத்து, இயக்கம் ஏ.கோவிந்தமூர்த்தி.இந்த நிகழ்ச்சியில் நடிகை சரண்யாவின் இன்னொரு ஆக்சனும் அபாரமாக இருந்தது.. ஹீரோயின் வரவில்லை என்று வருத்தத்துடன் இயக்குநர் மேடையில் சொன்னபோது எதிரில் அமர்ந்திருந்த ஒரு பத்திரிகையாளரை பார்த்து நடிகை சரண்யா, நல்லா ஏமாந்தீங்களா என்பதை போல சின்னக்குழந்தைகள் செய்யும் அந்த ஆக்சனை செய்து காட்டியது அழகோ அழகு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி