செய்திகள்,திரையுலகம் ரஜினி – ஷங்கர் இணையும் ரூ.250 கோடி பட்ஜெட் படம் இந்தியாவின் முதல் Live Action 3D Movie !…

ரஜினி – ஷங்கர் இணையும் ரூ.250 கோடி பட்ஜெட் படம் இந்தியாவின் முதல் Live Action 3D Movie !…

ரஜினி – ஷங்கர் இணையும் ரூ.250 கோடி பட்ஜெட் படம் இந்தியாவின் முதல் Live Action 3D Movie !… post thumbnail image
சென்னை:-கோச்சடையான் படம் இந்தியாவின் முதல் Motion Capture Movie என்ற பெருமையை பெற்றிருக்கும் நிலையில் இந்தியாவின் முதல் Live Action 3D Movie ஒன்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதிலும் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.‘Journey to the Center of the Earth’ என்ற படம் ஹாலிவுட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதுதான் உலகின் முதல் Live Action 3D Movie என்ற பெருமையை பெற்றது. தற்போது தமிழில் ஒரு live-action-3d-movie எடுக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.

சுமார் 250 கோடி ரூபாய் வரை பட்ஜெட் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை ரஜினிகாந்த் நடிக்க ஒப்புக்கொண்டால் மட்டுமே எடுக்க இருப்பதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். ரஜினியை நம்பி தாராளமாக எத்தனை கோடி வேண்டுமானாலும் முதலீடு செய்து புதிய முயற்சியை ஆரம்பிக்கலாம் என்றும் அதற்கு சிவாஜி, எந்திரன் போன்ற படங்களே சிறந்த எடுத்துக்காட்டுக்கள் என்று கூறிய ஷங்கர், இந்தியாவின் முதல் Motion Capture Movie யில் ரஜினி நடித்தது போல இந்தியாவின் முதல் Live Action 3D Movie அவரை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் கோச்சடையான் படத்திற்கு பின்னர் கே.எஸ்.ரவிகுமார் படத்தில் நடிக்கும் எண்ணத்தில் இருக்கின்றார். இந்நிலையில் ஷங்கர் படத்திலும் நடிப்பாரா என்ற கேள்வி கோலிவுட்டை கலக்கி வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி