செய்திகள்,திரையுலகம் கின்னஸ் சாதனையை நோக்கி ‘எம்.ஜி.ஆர் ஸ்டூடியோவில் நம்பியார்’ படம்!…

கின்னஸ் சாதனையை நோக்கி ‘எம்.ஜி.ஆர் ஸ்டூடியோவில் நம்பியார்’ படம்!…

கின்னஸ் சாதனையை நோக்கி ‘எம்.ஜி.ஆர் ஸ்டூடியோவில் நம்பியார்’ படம்!… post thumbnail image
சென்னை:-கின்னஸ் சாதனையில் இடம் பெறுவதற்காக அவ்வப்போது படங்கள் எடுப்பார்கள், ஆனால் அந்த படங்கள் வெறும் சாதனை படங்களாகத்தான் இருக்குமே தவிர மக்கள் ரசிக்க மாட்டார்கள்.

சமீபத்தில் கூட அகடம் என்ற படம் ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்டது, முயற்சியும் வீணாகாமல் கின்னஸ் சான்றிதழ் பெற்றது. ஆனால் தியேட்டரில் ஒரு நாள்கூட ஓடவில்லை.இப்போது அதேபோல் மற்றொரு படக்குழு கின்னஸ் சாதனையில் இடம் பெறுவதற்காக, தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.நேரத்துக்குள் ஒரு படம் எடுக்க போகிறார்கள். கதை எழுதுவதில் ஆரம்பித்து முழு படமும் 48 மணிநேரத்தில் எடுக்கப்பட்டு விடுமாம்.

படத்தின் பெயர் எம்.ஜி.ஆர் ஸ்டூடியோவில் நம்பியார், இப்படத்தில் காமெடி நடிகர் கருணாஸ் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.இந்த திரைப்படத்தை கன்னட இயக்குனர் ரஜினீஸ் பவன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் பெங்களூரில் கின்னஸ் ஜூரிகள் முன்னிலையில் நடக்க இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி