ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது எல்லோரும் எதிர்பார்த்தபடி கே.எஸ்.ரவிக்குமார் தான். இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன. அனுஷ்காவால் நடிக்க முடியவில்லையென்றால் அடுத்ததாக பாலிவுட்டில் இருந்து நடிகையை கொண்டுவரும் திட்டமும் இருக்கிறதாம்.
நான் ஈ படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் சுதீப் அந்த ஒரு படத்திலேயே தான் ஒரு சிறந்த வில்லன் என்று நிரூபித்துவிட்டார்.. சுதீப்புக்கு போன் செய்து சூப்பர் ஸ்டார் பாராட்டியது எல்லாம் இன்னும் யாரும் மறக்கவில்லை. இதனால் இப்படத்தில் சுதீப்பை வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி