கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வாலு படத்தின் பாடல்களை தான் கேட்கவேண்டும் என்று ஹன்சிகா ஒரு ஆளை அனுப்பியதாகவும், அவருக்காக படத்தின் படத்தின் ஒரிஜினல் பாடல் சிடியை கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் ஹன்சிகா அப்படி யாரையும் அனுப்பவில்லையாம். யாரோ தன் பெயரை சொல்லி ஏமாற்றி இசையமைப்பாளரிடம் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டதாகவும், இதற்கும் தனக்கு எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும் ஹன்சிகா கூறியதாக கூறப்படுகிறது.
இதே போன்றுதான் பிரியாணி படப்பாடல்களும் அதிகாரபூர்வமாக ரிலீஸ் ஆவதற்கு முன்பே இணையத்தில் ரிலீஸ் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இந்த பிரச்சனை காரணமாக அவசர அவசரமாக வாலு படத்தின் பாடல்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடுகள் செய்துவருகின்றது. வாலு படத்தின் பாடல்களை அதிகாரபூர்வ ஒருஜினல் சிடியில் மட்டும் கேட்குமாறு தமிழ் ரசிகர்களுக்கு வாலு படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி