செய்திகள் லண்டனில் நாடகமாக அரங்கேறும் டெல்லி மாணவி பாலியல் பலாத்கார சம்பவம்!…

லண்டனில் நாடகமாக அரங்கேறும் டெல்லி மாணவி பாலியல் பலாத்கார சம்பவம்!…

லண்டனில் நாடகமாக அரங்கேறும் டெல்லி மாணவி பாலியல் பலாத்கார சம்பவம்!… post thumbnail image
லண்டன்:-டெல்லியில் கடந்த கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பேருந்து ஒன்றில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் அவர் மரணம் அடைந்த விவகாரம் நாட்டையே உலுக்கியது. இந்த கொடூர சம்பத்தை நாடகமாக அரங்கேற்ற லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 5ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதி வரை இந்த நாடகம் நடைபெறுவதாகவும், லண்டனில் உள்ள Southbank Centre, Belvedere Road, London, SE1 8XX என்ற இடத்தில் நடைபெறும் இந்த நாடகத்தை பார்க்க டிக்கெட் கட்டணமாக 22.50 இங்கிலாந்து பவுண்டுகள் வசூல் செய்யப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 2300 ரூபாய் ஆகும்.நிர்பயா என்ற பாதிக்கப்பட பெண்ணின் பெயரையே நாடகத்திற்கு வைக்கப்பட்ட இந்த நாடகத்தை பெண் இயக்குனர் Yael Farber இயக்குகிறார். நேற்று இந்த நாடகத்தின் ஒத்திகை காட்சி நடைபெற்றது. இந்த நாடகம் குறித்து இயக்குனர் Yael Farber கூறும்போது “இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் சாலையில் நின்று போராடினார்கள். இதுபோன்ற குற்றங்கள் நாட்டுக்கு தலைகுனிவையும் அவமரியாதையையும் ஏற்படுத்தும்.

இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் பலாத்காரம் என்பது பொதுவான நோயாக உள்ளது. எங்களது நிர்பயா நாடகம், பாலியல் வன்முறைக்கு எதிராக அனைவரையும் ஒன்று சேர்க்கும் சக்தியாக இருக்கும்” என்று கூறினார்.இந்த நாடகத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் இடையில் பெண்களின் உரிமைகளுக்காக போராடியவர்கள் கெளரவிக்கப்படுவார்கள் என்றும் இயக்குனர் தெரிவித்தார். இந்த நாடகத்திற்கான டிக்கெட்டுக்கள் அனைத்துமே விற்கப்பட்டுவிட்டதால் இந்த நாடகத்திற்கு லண்டனில் பெரும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி