சென்னை:-சிங்கம் 2 படத்திற்கு பிறகு சூர்யா எந்த இயக்குநருடன் கைக்கோர்க்கிறார் என்று அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்தபோது கௌதம் மேனன் உடன் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகி பின் அந்த கதை பிடிக்காமல் போக அதில் இருந்து விலகிக் கொண்டார்.
இதற்காக கௌதமுக்கு ஒரு பெரும் தொகை கை மாறியதாக கூறப்படுகிறது. பின் லிங்குசாமியுடன் இணைந்த சூர்யா அஞ்சான் என்ற அதிரடி ஆக்ஷன் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார். அஞ்சான் படமும் பாதி ஷூட்டிங் முடிந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படத்திற்கு சில பெரிய இயக்குநர்கள் கதை சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் அவை எதுவுமே சூர்யாவிற்கு பிடிக்காததால் அனைத்தையும் ரிஜெக்ட் செய்துவிட்டாராம். ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்துக்கு என்னை முழுமையாக அர்ப்பணிக்கூடிய என்னிடம் இன்னும் அதே இஞ்சி மரப்பையை வந்து அரைத்துக் கொண்டிருக்கிறார்களே என்று புலம்புகிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி