செய்திகள்,திரையுலகம் இன்று மாலை முதல் ‘நிமிர்ந்து நில்’ திரைப்படம்…

இன்று மாலை முதல் ‘நிமிர்ந்து நில்’ திரைப்படம்…

இன்று மாலை முதல் ‘நிமிர்ந்து நில்’ திரைப்படம்… post thumbnail image
சென்னை:-வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் ஜெயம் ரவி, அமலாபால், ராகினி த்வேதி, சிறப்புத் தோற்றத்தில் சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘நிமிர்ந்து நில்’ திரைப்படம் நேற்று (07 மார்ச் 2014) வெளியாவதாக இருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் ஏற்பட்ட நிதிப் பிரச்சனையால் இந்த படம் நேற்று வெளியாகமல் போனது.அதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் இன்று காலை முடிவுக்கு வந்தன.

இதனால், இன்று (08 மார்ச் 2014) மாலை 6.30 மணி காட்சி முதல் இப்படம் திரையிடப்படுவதாக இப்படத்தைத் தயாரித்துள்ள வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி