அது மட்டுமின்றி, கடனாக வாங்கிய பணத்தை உடனடியாக திருப்பித் தர வேண்டும் எனவும் அவர்கள் நெருக்கடி கொடுத்தனர்.பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்திவரும் மார்க் ஜான்சனின் வக்கீல் இது தொடர்பாக கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கிளப் நிர்வாகிகள் தனது கட்சிக்காரருக்கு தொடர்ந்து தொந்தரவு தந்து வருவதாகவும், போதையில் இருக்கும் நபர்களை சூதாட அனுமதிக்க கூடாது என்ற சட்டம் உள்ளபோது, இலவசமாக மது கொடுத்து சூதாட்ட அட்டையில் உள்ள எண்ணை கூட சரியாக பார்க்க முடியாத போதையில் இருந்த மார்க் ஜான்சன் 5 லட்சம் டாலர்களை கடனாக தர வேண்டும் என்று கூறும் அந்த கிளப்பின் செயல்பாடு ஏற்கத்தக்கதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் நிதானமிழந்த நிலையில் இருந்த போது கிளப் ஊழியர்கள் அவருக்கு தொடர்ந்து மதுவையும் டோக்கன்களையும் கொடுத்ததற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.இது தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும் ஒருவரிடம் பிக் பாக்கெட் அடிப்பதற்கு சமமானதாகும். இந்த 5 லட்சம் கடன் பொறுப்பில் இருந்து எனது கட்சிக்காரரை விடுவிக்க வேண்டும்’ எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி