அவ்வாறு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கையில் கடந்த திங்கட்கிழமை அவர்களுக்கு உறைந்தி நிலையில் உள்ள வைரஸ்கள் கிடைத்தது. இந்த வைரஸ்களை மைக்ரோஸ்கோப்பில் மட்டுமே பார்க்க முடியும். pithovirus sibericum என்ற வைரஸ் வகையை சார்ந்த இந்த வைரஸ், சுமார் 30,000 வருடங்களுக்கு முன்பு பூமியில் இருந்தது என்பது ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான் உலகிலேயே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களில் பழமை வாய்ந்தது ஆகும்.
இந்த வகை வைரஸ்களினால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றாலும் இந்த வகையான வைரஸ்களை பூமியில் இருந்து தோண்டி எடுக்க வேண்டாம் என National Centre of Scientific Research நிறுவனத்தின் உதவித்தலைவர் Dr.Chantal Abergel கருத்து தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி