இந்நிலையில், தனது வீட்டில் விந்தியா தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ‘மனத மரையள்ளி‘ படத்தின் படப்பிடிப்பு நேரத்தில், மாரத்த ஹள்ளியை சேர்ந்த மஞ்சுநாத் என்பவருடன் விந்தியாவுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்தனர்.சமீபத்தில் சினிமா குழுவினர் சிம்லாவுக்கு சுற்றுலா சென்றபோது, விந்தியாவுடன் மஞ்சுநாத்தும் சென்றிருந்தார். இதன் பின்னர் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் மாலை விந்தியாவை சந்தித்த மஞ்சுநாத், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார். சம்மதிக்காவிட்டால் வீடியோ காட்சிகளை வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். விரக்தி அடைந்த விந்தியா, வீட்டில் தந்தைக்காக வைத்திருந்த சர்க்கரை நோய்க்கான 80 மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி