ஐதராபாத்:-பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர் பாரத் நேற்று அதிகாலை குடிபோதையில் காரை ஓட்டி வந்தார். அப்போது மாதப்பூர் போலீசார் அவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து இருந்ததை கண்டுபிடித்தனர்.
அப்போது போலீசாருடன் பாரத் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். இதனால், போலீசார் அவரை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். உள்ளூர் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தினர். அங்கு அவர் ஜாமீன் பெற்று சென்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி