செய்திகள் உக்ரைன் துறைமுகத்தை கைப்பற்றியது ரஷ்யா…

உக்ரைன் துறைமுகத்தை கைப்பற்றியது ரஷ்யா…

உக்ரைன் துறைமுகத்தை கைப்பற்றியது ரஷ்யா… post thumbnail image
கெர்ச்:-ரஷ்யா அருகே உள்ள உக்ரைனில் உள்நாட்டு கலவரத்தால் அதிபர் யனுகோவிச் பதவி விலகி ரஷ்யாவுக்கு தப்பி ஓடினார். இதையடுத்து, இடைக்கால அரசு பதவி ஏற்றது. இந்நிலையில், ரஷ்யா தனது ராணுவ படைகளை அனுப்பி உக்ரைனின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கிரிமியாவில் விமான நிலையம், அரசு கட்டிடங்களை கைப்பற்றியது.

உக்ரைன் கடல் பகுதிக்கு 2 போர் கப்பல்களையும் அனுப்பியது.ரஷ்யாவிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள உக்ரைனின் கெர்ச் துறைமுகப் பகுதிக்குள் படகு மூலமாக நேற்று நுழைந்த ரஷ்ய ராணுவ படையினர் அந்த துறைமுகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கெர்ச் துறைமுகம் வழியாக ஏராளமான ராணுவ படை களை குவிக்கவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சர்வதேச விதிமுறைகளை மீறி ரஷ்யா, உக்ரைனில் ஊடுருவுவதை நிறுத்திக் கொள்ளுமாறு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஆனாலும், ரஷ்யா தனது படைகளை வாபஸ் பெற மறுத்து விட்டது. இந்நிலையில், உக்ரைனுக்கு, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி, பிரிட்டன் வெளியுறவு துறை அமைச்சரும் இன்று செல்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி