செய்திகள்,திரையுலகம் ஆஸ்கார் திரைப்பட நூலகத்தில் இடம் பிடித்தது பிரபுதேவாவின் ஆர்.ராஜ்குமார் திரைப்படம்!…

ஆஸ்கார் திரைப்பட நூலகத்தில் இடம் பிடித்தது பிரபுதேவாவின் ஆர்.ராஜ்குமார் திரைப்படம்!…

ஆஸ்கார் திரைப்பட நூலகத்தில் இடம் பிடித்தது பிரபுதேவாவின் ஆர்.ராஜ்குமார் திரைப்படம்!… post thumbnail image
அமெரிக்கா:-The Library of the Academy of Motion Picture Arts and Sciences என்ற நூலகம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது. 1927ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த திரைப்பட நூலகம், உலகின் மிகவும் புகழ்பெற்ற திரைப்படங்களின் தொகுப்பை சேகரித்து வைத்திருக்கும் பணியை கடந்த பல வருடங்களாக செவ்வனே செய்து வருகிறது.

இந்த நூலகத்தில் உள்ள திரைப்படங்கள் உலகில் உள்ள பல லட்சக்கணக்கான திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்த நூலகத்தில் ஒரு படம் இடம்பெற்றுவிட்டாலே போதும், அந்த படம் உலக அளவில் பேசப்படும் வாய்ப்பு கிடைக்கும்.இந்த நூலகத்தில் ஒரு இந்திய படம், அதுவும் ஒரு தமிழக இயக்குனரின் படம் சமீபத்தில் இடம்பெற்றுள்ளது என்பதுதான் இந்த செய்தி. பிரபல தமிழ் இயக்குனர் பிரபுதேவா சமீபத்தில் இயக்கிய ஆர்.ராஜ்குமார் என்ற பாலிவுட் படம்தான் இந்த நூலகத்தில் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.

ஆர்.ராஜ்குமார் படம் வேறு மொழியில் இருந்து ரீமேக் செய்யப்பட்டிருந்தாலும், அதன் திரைக்கதையை பிரபுதேவா சொந்தமாக எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாஹித் கபூர், சோனாக்ஷி சின்ஹா நடித்திருந்த இந்த படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றியை பெற்றதோடு, தற்போது The Library of the Academy of Motion Picture Arts and Sciences என்ற நூலகத்திலும் இணைந்த பெருமையை பெற்றுள்ளது.
இந்த நூலகத்தில் இடம் பெற்ற மற்ற இந்திய படங்கள் Devdas, Dam 999, Lagaan, Chak De India, மற்றும் Rajneeti போன்ற படங்கள் ஆகும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி