சென்னை:-சூப்பர்ஸ்டார் ரஜினியும் இயக்குநர் கே,எஸ். ரவிக்குமாரும் அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்திரன் படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலும் இந்த படத்தில் ஒபந்தம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது .
ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 9-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் கலந்துகொள்ள இருப்பதாக ஏற்கனவே சவுந்தர்யா ரஜினிகாந்த் அறிவித்திருந்தார் .
ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படமான படையப்பாவை போல் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் என என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி